பல மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பினார் சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணான்டோ

போதகர் ஜெரோம் பெர்ணான்டோ இன்று (29) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர், கட்டார் ஏர்லைன்ஸில் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் அவர் 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்க உள்ளார்.

ஜெரோம் பெர்ணான்டோ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வரும் போது அவரை கைது செய்ய வேண்டாம் எனவும் அவர் இலங்கை வந்ததும், 48 மணி நேரத்திற்குள் அவரிடம் வாக்குமூலம் பெறுமாறும் சிஐடிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Latest Articles