ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் சதிகார குழுவொன்று இருப்பதாகவும், எனினும், பிளவு இல்லை என அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
“கட்சியில் பிளவு இருப்பதாக கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் கட்சியில் சிறு கும்பல் ஒன்று உள்ளது. அதில் வழிகெட்ட குழுக்களும், சதிகாரக் குழுக்களும் இருக்கின்றன. எனினும், அவர்களில் பலர் தற்போது மீண்டும் இணைந்து அரசியல் செய்ய எங்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்றும் எமது கட்சி இந்த நாட்டிலேயே அதிக உறுப்பினர்களையும் அமைப்பு பலத்தையும் கொண்ட வலுவான அரசியல் கட்சியாகும். எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் இந்த நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளையும் விட அதிக வெற்றியைப் பெறக்கூடிய ஒரே கட்சி இந்தக் கட்சிதான் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என அக்கட்சியின் செயலாளர் தெரிவித்தார்.
