‘பஸில் நிதி அமைச்சரானது பெரும் வரப்பிரசாதமே’ – அரவிந்தகுமார் புகழாரம்

இந்தியா, அமேரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் மிக மிக நெருக்கமான நல்லுறவுகளை மேற்கொண்டு வந்துள்ள பெசில் ராஜபக்சவிற்கு, நிதியமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டதானது, இந்நாட்டின் மேம்பாடுகளுக்கு கிடைக்கப்பெற்ற பெரும் வரப்பிரசாதமேயாகுமென்று, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், பெசில் ராஜபக்ச நிதியமைச்சு பொறுப்பேற்றமை, குறித்து விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவ் அறிக்கையில், எமது நாட்டு அரசின் அமைச்சரவையில் பெசில் ராஜபக்ச இல்லாமை இருந்தமையானது, பெரும் குறைபாடாகவே இருந்ததும், மட்டுமல்லாமல் வெற்றிடமாகவும் இருந்தது. அவ்வெற்றிடமும், குறைபாடும் தற்போது நீங்கப்பெற்றிருக்கின்றது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெரும் நெருக்கடிகளை நாடும், நாட்டு மக்களும் எதிர்நோக்கியிருக்கின்றனர். கோவிட் 19 தொற்று, சேதனப்பசளை விடயம், பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தலை விரித்தாடிக்கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய நிலையில் பெசில் ராஜபக்ச, நிதி அமைச்சில் பொறுப்பை ஏற்றமை வரவேற்கத்தக்கதேயாகும். நாட்டை எவ்வகையில் மீட்டெடுக்க முடியுமென்பதை, பெசில் ராஜபக்ச நன்றாகவே உணர்வார். ஏற்கனவே, அவர் அமைச்சராக இருந்த வேளையில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை சகலரும் பாராட்டக்கூடிய வகையில் மேற்கொண்டிருந்தமை இந்நாடும் நாட்டு மக்களும் நன்கறிவர்.

அவ்வகையில் படு பாதாளத்தில் விழுந்திருக்கும் நிலையினை அவராலேயே மீட்டெடுக்க முடியும். இந்தியா, அமேரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் பெசில் ராஜபக்சவிற்கு இருந்து வரும் நல்லுறவுகளை மென்மேலும் மேம்படுத்தி, அந்நாடுகளின் அனுகூலங்களையும் பெற்றுக்கொள்ள கூடிய அரிய வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.

அவ் அனுகூலங்களையும் பெசில் ராஜபக்சவினால் மட்டுமே முடியுமென்பதை, நான் ஆணித்தனமாக கூறிக்கொள்கின்றேன். பெசில் ராஜபக்ச, சர்வதேச ரீதியில் பல்வேறு தொடர்புகளை மேற்கொண்டு, அந் நாடுகளின் பேரபிமானங்களையும் பெற்றுக்கிருக்கின்றார்.

அத்துடன் இந்நாட்டின் சகல தரப்பினர்களுடன் நல்லுறவுகளையும் மேற்கொண்டுள்ளார். அவரை எவருமே விமர்சிப்பது கிடையாது. பெசில் ராஜபக்ச என்பவர் ஒரு திறமைசாலி மட்டுமல்லாது ஏனையவர்களையும் மதித்து நடக்க கூடியவர். அரசியல் சாணக்கியமிக்க அவரது சேவை இந்நாட்டுக்கு அவசியம் தேவைப்படுகின்றது. அத்தேவையுணர்ந்து அவர் அமைச்சு பொறுப்பை ஏற்றுள்ளார்.

அவருடைய இப்பிரவேசமானது இந்நாட்டிற்கு ஆரோக்கியமான ஒரு சூழலை ஏற்படுத்துமென்பதில் சந்தேகமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் பெசில் ராஜபக்ச அமைச்சு பொறுப்பை ஏற்ற உடனேயே அவருக்கு நேரடியாக வாழ்த்துக்களை தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எம். செல்வராஜா, பதுளை

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles