பலாங்கொடை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
பலாங்கொடை வெலிகபொல கபுகல வீதியிலேயே நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 43 வயதுடைய குனதிலக்க என்பவர், வெலிகபொல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை வெலிகபொல காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எவ்.எம். அலி