கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை அளுத்நுவர பிரதேசத்தில் இபோச பஸ்ஸில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவை கெமுனுபுர பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பொடிமெனிக்கே என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக பலாங்கொடை காவற்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பெண் பானதுறை பிரதேசத்தில் இருந்து மஹியங்கனை பிரதேசத்தைச் நோக்கி செல்லும் பஸ்ஸில் பலாங்கொடை மாமல்கஹ பிரதேசத்தில் உறவினர்களுடன் ஏறிய பெண் பின்புற ஆசனம் ஒன்றில் அமர சென்றபோது பின்புற கதவால் வெளியே விழுந்துள்ளார். குறித்த பெண்ணை பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்தார்.
மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எவ்.எம். அலி