பாக்குநீரிணை 10 மணிநேரத்துக்குள் நீந்திக்கடக்க 13 வயது சிறுவன் முயற்சி!

இந்தியா, தமிழகம் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான தூரப்பகுதியை (பாக்குநீரிணை) 10 மணிநேரத்துக்குள் நீந்திக் கடக்கும் முயற்சியில் தரம் 8 இல் கல்வி பயிலும் சிறுவர் ஒருவர் ஈடுபடவுள்ளார்.

ஹரிஹரன் தன்வந் என்ற சிறுவனே எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி இந்த முயற்சியில் இறங்கவுள்ளார்.

தனுஷ்கோடியில் இருந்து நள்ளிரவு 12.05 இற்கு நீச்சலை ஆரம்பித்து மதியம், தலைமன்னார் பியர் என்ற இடத்தில் நீச்சலை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளார்.

“ இளைஞர்கள் மட்டத்தில் அதிகரித்துவரும் போதைவஸ்து பாவனையில் இருந்து மீள்வது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த நீச்சல் முயற்சி காணப்படுகிறது.” – என்று திருகோணமலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஹரிஹரன் தன்வந் தெரிவித்துள்ளார்.

“ கடற்பரப்பில் இருந்து வெற்று பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை அகற்றி கடற்பரப்பினை சுத்தமாக வைத்திருத்தல், ஆமை முதலான கடல்வாழ் உயிரினங்களை பாதுகாத்தல், முருகைக் கற் பாறைகளின் முக்கியத்துவத்தை பேணுதல் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த நீச்சலில் ஈடுபடவுள்ளேன்.” எனவும் அச்சிறுவன் கூறியுள்ளார்.

இவர் கடந்த 8 வருடங்களாக நீச்சல் பயிற்சி பெற்றுவருகின்றார்.

Related Articles

Latest Articles