பாடசாலை மாணவர்களுக்கு ஜனவரியில் சீருடை

2023ஆம் ஆண்டுக்காக மாணவர்களுக்கு வழங்குவதற்கு 39.5 மில்லியன் பாடப்புத்தங்களை அச்சிட வேண்டியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சபையில் தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனவரி மாதளமவில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை விநியோகிக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்களின் போது மிலான் ஜயதிலக்க எம். பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், அடுத்த ஆண்டுக்காக 39.5 மில்லியன் பாட ப்புத்தகங்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 45 சதவீத பாட புத்தகங்களை இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கடதாசி மற்றும் மூலப்பொருள் இறக்குமதி ஊடாக அரசாங்க அச்சக திணைக்களத்தின் ஊடாக அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதியான 55 சதவீதமான புத்தகங்களை அச்சிட தேசிய பெறுகை ஊடாக திறந்த மனுகோரல் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய குறுகிய காலத்திற்குள் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு துரிதமாக விநியோகிக்கப்படும். பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் தொடர்பில் தெரிவித்த அவர்,சீனாவிடமிருந்து பொதி செய்யப்பட்ட 70 சதவீதமான சீருடைகளை பெற்றுக்கொள்ள இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மிகுதி 30 சதவீதமான சீருடைகளை தேசிய ரீதியில் உற்பத்தி செய்ய 1900 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles