நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (22) விடுமுறை வழங்குவதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல், உண்மைக்கு புறம்பானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளைய தினம் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் வழமை போன்று கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விச் செயலாளர்களுக்கும் மாகாணக் கல்வி பணிப்பாளர்களுக்குமே உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.










