பாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்

வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்கும் வகையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி செயற்பட்டால் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வது தொடர்பில் அரச உயர்மட்டம் அவதானம் செலுத்தி வருகின்றது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இரண்டாம்வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது பாதீட்டை ஆதரித்துவிட்டு, குழுநிலை விவாதத்தின்போது (அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள்) சில அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க மொட்டு கட்சி திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான நடவடிக்கையில் மொட்டு கட்சி இறங்கினால், பாதீடு நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles