பாராளுமன்றிலிருந்து விடைபெற்றார் அஜித் நிவாட் கப்ரால்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால்   பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு இன்று (13) எழுத்துமூலம் அறிவித்தார்.
இதற்கமைய, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிப்பதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுப்பார்.
அஜித் நிவாட் கப்ரால்   ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராகக் கடமையாற்றியிருந்தார்.

Related Articles

Latest Articles