பாலிதவின் பின்னணியில் யார்?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரமே பாலித ரங்கே பண்டார கருத்துகளை முன்வைத்திருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ பாலித ரங்கே பண்டார ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர், எனவே, அவர் வெளியிடும் கருத்துக்கு மதிப்பு உள்ளது. அவர் வெளியிடும் அறிவிப்புகளை கட்சியின் நிலைப்பாடாகவே கருத வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. எனவே, தனது செயலாளர் ஊடாக மேற்படி கருத்தை வெளியிட்டு சமூகத்தின் நிலையை அறிய அவர் முயற்சி எடுத்திருக்க கூடும்.” – என்றார்.

அதேவேளை, நாட்டில் உள்ள அரசமைப்பு தொடர்பில் ரங்கே பண்டாரவுக்கு புரிதல் இல்லை என்பதையே அவரின் அறிவிப்புகள் வெளிப்படுத்துகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

Related Articles

Latest Articles