இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது என்று வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.
உள்நாட்டு பால்மா விலை தொடர்பான அறிவித்தல் இன்னும் வெளியாகவில்லை.
