பிரதமர் ஆட்சிமுறைமைக்கு பொன்சேகா போர்க்கொடி!

“ தற்போதைய நாடாளுமன்றத்தில் ஊழல்வாதிகளும் உள்ளனர். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைநீக்கிவிட்டு, பிரதமர் ஆட்சிமுறைமையை கொண்டுவருவதற்கான நேரம் இதுவல்ல.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் பொன்சேகா மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி முறைமையை நீக்குவது இலகுவான காரியம் அல்ல, சர்வஜன வாக்கெடுப்பையும் நடத்த நேரிடும். தற்போதைய சூழ்நிலையில் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனவே, இருக்கின்ற பொறிமுறையை பலப்படுத்துவதைவிட, அதனை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு, பிரதமர் ஆட்சிமுறைமையை கொண்டுவர வேண்டுமெனில் நாடாளுமன்றம் பலம்மிக்கதாக இருக்க வேண்டும். நாட்டை ஆளக்கூடிய நல்லவர்கள் 225 பேர் இருக்கின்ற நாடாளுமன்றத்தின்கீழ் அதனை செய்யலாம். தற்போதைய நாடாளுமன்றத்தில் ஊழல் வாதிகள் உள்ளனர், இது பற்றி மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். ஊழல் வாதிகளை எமது கட்சிக்கு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்போவதில்லை.

அதேவேளை, மொட்டு, யானை கூட்டணி எதிரணி தரப்புக்கு சவாலாக அமையாது.” – என்றார்.

Related Articles

Latest Articles