பிரதமர் பதவியில் மாற்றம் வராது: என்பிபி மேலும் விஸ்தரிப்பு!

பிரதமர் பதவியில் மாற்றம் வராது எனவும், தேசிய மக்கள் சக்தி மேலும் விஸ்தரிக்கப்படும் எனவும் அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்திக்குள் மோதல் மூண்டுள்ளது எனவும், பிரதமர் பதவியை மாற்றுவதற்காக அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளது எனவும் தகவல்கள் பரப்பட்டுவரும் நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” தேசிய மக்கள் சக்திக்குள் உள்ளக மோதலாம், அமைச்சரவையும் மாற்றப்படவுள்ளதாம் என்றெல்லாம் கருத்துகளை முன்வைப்பவர்களின் மூளையை நிச்சயம் பரிசோதித்து பார்க்க வேண்டும். எதிரணி என்றால் எதையாவது கூற வேண்டும் என்பதற்காகவே இப்படியான கதைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. அவை அப்பட்டமான பொய்யாகும்.

தேசிய மக்கள் சக்தி மேலும் விஸ்தரிக்கப்படும். உள்ளாட்சிசபைத் தேர்தல் அதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. கொழும்பு மாநகரசபையில் எமது ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.”- என லால்காந்த மேலும் குறிப்பிட்டார்.

 

Related Articles

Latest Articles