பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி 27 இல் ஆரம்பம்! முன்னணி வீராங்கனை ஒசாகா விலகல்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதிவரை பாரீஸ் நகரில் நடைபெறவுள்ளது.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற இப்போட்டியில் இருந்து உலக தரவரிசையில் 3ஆவது இடம் வகிப்பவரும், கடந்த வாரம் முடிந்த அமெரிக்க ஓபனில் பட்டத்தை வென்றவருமான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா காயம் காரணமாக விலகியுள்ளார்.

இது குறித்து நவோமி ஒசாகா தனது டுவிட்டர் பதிவில்,

‘எதிர்பாராதவிதமாக இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபனில் என்னால் விளையாட முடியவில்லை. காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு இன்னும் குணம் அடையவில்லை. எனவே களிமண் தரையில் நடைபெறும் இந்த போட்டிக்கு தயாராக எனக்கு போதிய காலஅவகாசம் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) கொரோனா அச்சத்தால் பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles