பிலிப்பைன்ஸில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு

பிலிப்பைன்ஸின் மிண்டானாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

இருப்பினும் கட்டிடங்கள் குலுங்கியதுடன், இதுவரையில் எந்தவித உயிர் சேதமும் மற்றும் பாதிப்பும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த 2 ஆம் திகதி சனிக்கிழமையன்று பிலிப்பைன்ஸின் மிண்டானாவோவில் 7.5 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மீணடும் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles