பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் பட்சத்தில் புதிய அமைச்சரவை நவம்பர் 21 ஆம் திகதி கடமையேற்கும் என்று தெரியவருகின்றது.
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகும்போது, பொதுத்தேர்தலில் வென்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக உறுதியேற்பார்கள்.
சபாநாயகர் தேர்வு உள்ளிட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், அன்றைய தினமே புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது என்று அறியமுடிகின்றது.
25 அமைச்சுகள் மற்றும் அமைச்சுகளுக்கான அரச நிறுவனங்கள் என்பன தற்போது விஞ்ஞானப்பூர்வமாக ஒதுக்கப்பட்டு இறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
25 இற்கும் 30 இற்கு இடையில் பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். இராஜாங்க அமைச்சு பதவிகள் நீக்கப்பட்டுள்ளன.










