” மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். புதிய அரசமைப்பும் அவசியம். அதற்குரிய நடவடிக்கையை விரைந்து ஆரம்பிக்க வேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
” இலங்கை என்பது வெறுமனே சிங்கள, பௌத்த நாடு மட்டும் அல்ல என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். இது பல்லின மக்கள் வாழும் நாடாகும்.
கடந்தகால குற்றங்களை இந்த அரசுமீ சுமத்துவதற்கு நான் முற்படவில்லை. ஆனால் இந்த அரசாங்கத்துக்கும் பொறுப்பு உள்ளது. எனவே, பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும்.
மாகாணசபைத் தேர்தல் எப்போது நடத்தப்பம் என்ற உறுதிமொழி அவசியம். புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பேச்சை ஆரம்பிக்கவும். அதேபோல நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவும்.
இவை முழுமையான தீர்வு அல்ல. குறைந்தபட்சம் மேற்படி மூன்று விடயங்களை ஆரம்பித்து, சிறப்பான துவக்கத்தை வழங்குமாறு கோருகின்றேன்.” – எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.