ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள புதிய கூட்டணி எதிர்வரும் ஜனவரியில் மலரும். சஜித்தான் கூட்டணியின் தலைவர் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எதிரணி கூட்டணி அமைக்கும் முயற்சி வெற்றியளித்துள்ளது. எதிரணி பக்கம் வந்தவர்களில் சிலர் நேரடியாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட உள்ளனர்.
கட்சிக்கும், கூட்டணிக்கும் ஒரு தலைவர்தான். அவர் சஜித். கூட்டணிக்கு பொதுச்செயலாளர் ஒருவர் இருப்பார். தலைமைத்துவ சபை ஒன்று இருக்கும்.
சஜித்தின் தலைமைத்துவத்தை அனைவரும் ஏற்றுள்ளனர். இதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை மறுசீரமைக்கப்படும். மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் அது மாற்றப்படும்.” – என்றார்.