9 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை முன்மொழிவதற்கு ஆளுங்கட்சி தீர்மானித்துள்ளது.
9ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை முற்பகல் 9.30 மணிக்கு கூடவுள்ளது. இதன்போதே சபாநாயகர் பதவிக்கு இவரின் பெயரை பரிந்துரைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதி சபாநாயகர் பதவிக்கு ரஞ்சித் சிலம்பலாப்பிட்டியவின் பெயர் பிரேரிக்கப்படவுள்ளது.
அதேவேளை, ஆளுங்கட்சியின் சபாநாயகரை ஏற்றுக்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இதனால் சபாநாயகர் பதவிக்கு மஹிந்த யாப்பா அபேவர்தன ஏகமனதாக தெரிவுசெய்யப்படவுள்ளார்.