புதிய நாடாளுமன்றில் ஜனாதிபதி முன்வைக்கவுள்ள முதல் பிரேரணை…

புதிய நாடாளுமன்றத்தின் முதல்வார அமர்வின்போது நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கணக்கு வாக்கு பணத்துக்குரிய (Vote on Account) யோசனையை முன்வைக்கவுள்ளார்.

2025 ஏப்ரல் மாதம்வரையான அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உட்பட அரசாங்க பணிகளை தடையின்றி முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடாகவே கணக்கு வாக்கு பணம் முன்வைக்கப்படவுள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டும் சட்டம் (பாதீடு) இல்லாத சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நதி ஒதுக்கீடுகளை செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானமே கணக்கு வாக்குப் பணம் ஆகும்.

அநுர அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்குரிய பாதீடு பெப்ரவரி அல்லது மார்ச்சில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்கு பணத்துக்குரிய தீர்மானம் தற்போது தயாரிக்கப்பட்டுவருகின்றது எனவும், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்ட பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

Related Articles

Latest Articles