புதிய பிறப்புச் சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் அதில் இனம் வெளிப்படுத் தப்படமாட்டாது என்று பதிவாளர் நாயகம் அறி வித்துள்ளார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பிறப்புச் சான்றிதழில் இலங்கையர் என்று மட்டுமே இடம்பெறும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாய் – தந்தையரின் திருமண விவரங்கள் தொடர்பில் சமூகத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகப் பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாட்டின் அனைத்து குடிமக்களின் புதிய பிறப்புச் சான்றிதழ் களில் இலங்கையர் எனக் குறிப்பிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிறப்பின்போது ஆள் அடையாளத்தை உறுத்திப்படுத்தும் வகையில் வழங்கப்படும் 12 இலக்கங்களே பிற்காலத்தில் தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்குவதற்கு பயன்படுத்தப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இதுவரை காலமும் பிறப்புச் சான்றிதழில் “இலங்கை தமிழர்’ என்றோ அல்லது அது போன்றோ குறிப்பிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.