புனித பூஜை என்ற போர்வையில் பௌத்த துறவி ஒருவருடன் சுவாமி படங்களால் அலகரிக்கப்பட்ட வாகனத்தில் பொதுமக்களிடம் சட்டவிரோதமாக பொருட்கள் மற்றும் பணம் வசூலித்த போலி பக்தர்கள் மூவரை (நேற்று மாலை 06) கம்பளை பொலிஸார் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த சந்தேக நபர்களை பொறுப்பில் எடுத்து விசாரணைகளை மேற்கொண்டதில் சிவனொளிபாத யாத்திரையை அடிப்படையாகக் கொண்டு பணம் வசூலித்த விடயம் தெரியவந்துள்ளது
விசாரணையின் போது தாங்கள் சட்ட ரீதியாகவே புனித பூஜைக்கு நிதி சேகரித்ததாக சந்தேக நபர்களின் ஒருவரான பௌத்த பிக்கு கூறியதையடுத்து கம்பளை உடபலாத்த பிரதேச செயலாளர்
துஷாரி தென்னகோன் உடபளாத்த சங்கநாயக்கர் பீடம் உட்பட இதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் பொலிஸ் பொறுப்பதிகாரி தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர்கள் அனைவருமே அப்படியான ஒரு அனுமதியினை தாங்கள் யாருக்கும் வழங்க வில்லையென கூறியுள்ளர்
இதையடுத்து குறித்த நபர்களை கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவனொளிபாத மலையின் புனிதத்தை கெடுக்கவேண்டாமென கடுமையாக எச்சரித்து நகரைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டு மெனக்கோரி விடுவித்தார்.