புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணத்திற்கு வரிகள் கிடையாது

புலம்பெயர்ந்தோர் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்கப்படுவதாகவும் பலவந்தமாக இலங்கை நாணயமாக மாற்றப்படுவதாகவும் தெரிவித்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணத்திற்கு வரிகள் கிடையாது மற்றும் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்தை வெளிநாட்டு நாணயத்தில் பராமரிக்க அல்லது அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இலங்கை ரூபாயாக மாற்றிக்கொள்ளலாம் என்றும்  இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்த இலங்கையர்கள் தற்போதைய சலுகைகளை எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து அனுபவிக்க முடியும்.

Related Articles

Latest Articles