” பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து”

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

இதனை வலியுறுத்தும் வகையில், ” பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து” – என்ற ‘ஸடீக்கரை’ சட்டைகளில் ஒட்டியபடி, கையில் பட்டிகளை அணிந்துகொண்டு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபை அமர்வில் பங்கேற்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க கோரும் சர்வதேச தினம் இன்றாகும். அந்நாளிலேயே இதனை இலங்கையின் எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles