இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களை அவர் இழக்க நேரிட்டுள்ளது.
பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக செவோன் டேனியல் அணிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
ஒருநாள் தொடர் நாளை ஆரம்பமாகின்றது.
(பெத்தும் திஸ்ஸங்க விரைவில் குணமடைந்து அணியில் இடம்பெற, பிரார்த்திப்போம்)