பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக பாரத் நியமனம்!

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக அரசியல் – தொழிற்சங்க – சமூக – மற்றும் சர்வதேச செயற்பாட்டாளரான பாரத் அருள்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான நியமனம் இன்று (03.04.2023) வழங்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட துறையின் மனித வள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு மற்றும் துறை சார் அபிவிருத்திக்கு பொறுப்பாக செயற்படும் மிக முக்கிய நிறுவனமே பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமாகும்.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழ் குறித்த நிறுவனம் வருகின்றது.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக இதற்கு முன்னரும் பாரத் அருள்சாமி பதவி வகித்துள்ளார். அக்காலத்தில் அவரின் செயற்பாடுகள் சிறப்பாக அமைந்தன. இதனைக்கருதியே அவருக்கு மீண்டும் அப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவராகவும் பாரத் அருள்சாமி பதவி வகிக்கின்றார். அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles