‘பேக் ஐடி’யில் ஆணாக வலம்வந்து 15 வயது சிறுமியை காதலித்த 19 வயது யுவதிக்கு மறியல்…!

சமூக வலைத்தளங்களில் இளைஞன்போல் நடித்து, 15 வயது சிறுமியுடன் காதல் உறவில் ஈடுபட்டு, அவரது நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறப்படும் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தை சேர்ந்த 19 வயது யுவதியாவார்.

இவர் சமூக ஊடகத்தில் அறிமுகமான மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் தன்னை இளைஞராக காண்பித்து கடந்த ஒரு வருட காலமாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளார்.

இந்நிலையில் இவர் இளைஞர் ஒருவரின் குரலில் தொலைபேசி மூலம் சிறுமியுடன் தினமும் தொடர்பு கொண்டு வந்துள்ளார்.
இந்த சிறுமி தனது காதலனாக நினைக்கும் சந்தேக நபரான யுவதிக்கு தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் இந்த யுவதி , சிறுமியை நேரில் சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். ஆனால் இந்த சிறுமி , யுவதியை நேரில் சந்திப்பதை தவிர்க்க முற்பட்டுள்ளார்.

இதனை அறிந்து கொண்ட யுவதி தன்னை சந்திக்க வரவில்லை என்றால் சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்து விடுவதாக கூறி அச்சுறுத்தியுள்ளார்.

ஆனாலும் இந்த சிறுமி, யுவதியை நேரில் சந்திப்பதை தவிர்க்க முற்பட்டதால் இந்த யுவதி சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததையடுத்து சந்தேக நபரான யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதே அவர் ஆண் இல்லை பெண் ஒருவர் என பாதிக்கப்பட்ட சிறுமி அறிந்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles