பஸ் கட்டணம் அதிகரிக்குமா? கலந்துரையாடல் இன்று

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் கட்டணத்தை திருத்துவது தொடர்பில் நிதியமைச்சருடன் இன்று கலந்துரையாடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இலங்கை கனியவள கூட்டுதாபனத்தினால் ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 55 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு தற்போது 176 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 254 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து பஸ் கட்டணத்தை அதிகரித்தல் அல்லது எரிபொருளுக்கான நிவாரணத்தை பெற்று தருமாறு பேருந்து சங்கங்கள் கோருகின்றன.

இந்தநிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்று தங்களது சங்கத்தினர் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, நாளைய தினம் பேருந்து சங்கங்களுடனும் அமைச்சரவையிலும் பஸ் கட்டணத்தை அதிகரிப்பது அல்லது நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles