மின்சார வேலியில் சிக்குண்டு இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவரும் பரிதாபகரமாக சாவடைந்துள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டம், கொலொன்ன – பிட்டவல பிரதேசத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது யுவதியும், மாத்தறை, திக்வெல்ல – பத்தன பிரதேசத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
மேற்படி இருவரும் முகநூல் ஊடாக நண்பர்களாகியுள்ளனர்.
இந்நிலையில், யுவதியைச் சந்திப்பதப்பதற்காக குறித்த இளைஞர் நேற்றிரவு யுவதியின் வீட்டுக்கு வந்தார்.
இதன்போது உறவினர்கள் அவ்விருவரையும் பார்த்துவிட்டதால் அச்சமடைந்த அவ்விருவரும் குறித்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.
இந்நிலையிலேயே, யுவதியின் வீட்டிலிருந்த சற்றுத் தொலைவிலுள்ள விவசாயக் காணியிலிருந்து குறித்த இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
விவசாயக் காணிக்குள், காட்டு விலங்குகள் ஊடுருவதைத் தடுக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டே குறித்த இருவரும் மரணமடைந்தனர்.
சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.