பொங்கல் கிண்ணத்துக்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்று போட்டி நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் பதினாறு அணிகளின் பங்கு பற்றலுடன் நடைபெற்றது.
இப்போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் நேற்று மாலை 4 மணிக்கு மாஹகஸ்தோட்டம் விளையாட்டு கழகமும் ஹோஸ் பவர் விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் இரண்டுக்கு ஒன்று 2.1 என்ற கோல் அடிப்படையில் மாஹகஸ்தோட்டம் விளையாட்டு கழகத்தினர் வெற்றிவாகை சூடினர்.
வ. கார்த்திக்