பொது மக்களையும் ரயில் பாதையையும் அச்சுறுத்தும் பாரிய மரத்தினை வெட்டியகற்றுமாறு கோரிக்கை.

– கே.சுந்தரலிங்கம்

கொட்டகலை எக்கமுத்து கம பகுதியில் 113 வது மைல் கல்லுக்கு அருகாமையில் ஹட்டன் பதுளை பிரதான ரயில் பாதையில் பொது மக்களையும் ரயில் பாதையினை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவரும் பாரிய மரத்தினை வெட்டி அகற்றுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த மரத்தின் கிளைகள் அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளின் கூரைகளின் மீது பல தடைவைகள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெய்வாதீமான எவருக்கும் எவ்வித சேதமும் இன்றி உயிர்தப்பியுள்ளதாகவும் மழைக்காலங்களிலும் காற்றின் போது இங்கு வசிப்பவர்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும்.இரவு வேளைகளில் நித்திரை கொள்ளாது விழித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு வசிபப்வர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் குறித்த மரத்தின் கிளைகள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக பல தடைவைகள் ரயில் போக்குவரத்து இவ்விடத்தில் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் இவர்கள் இந்த மரம் முறிந்து வீழ்ந்தால் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கோ ரயில் பயணிகளுக்கோ ஆபத்து ஏற்படலாம் என இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேநேரம் டெலிகிளையார் தோட்டத்திலிருந்து பத்தனை தமிழ் வித்தியாலயம் கொட்டகலை வைத்தியசாலைக்கு செல்லும் பொது மக்கள் பாடசாலை மாணவர்களும் இந்த பாதையினூடாகவே செல்கின்றனர்.

எனவேஇ மரத்தில் குளவிகள் கூடு கட்டியிருப்பதனால் மரம் விழ்ந்தாலோ அல்லது குளவிகள் களைந்தாலோ மேலும் பொது மக்கள் குளவி கொட்டுக்கும் ஆளாக கூடும் என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மரத்தினை வெட்டி அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்த போதிலும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் இவ்வாறானதொரு பாரிய மரம் முறிந்து வீழ்ந்து பல மணித்தியாலங்கள் பொது போக்குவரத்து தடைப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்இ நாங்கள் இங்கு சுமார் 15 வருட காலமாக வாழ்ந்து வருகிறோம் குறித்த மரத்தில் கிளைகள் பல தடைவைகள் எமது வீட்டின் கூரைகள் மீது வீழ்ந்து கூரைகள் சேதமடைந்துள்ளன கிளைகள் விழும் குறித்த பகுதியில் எவரும் இருக்காததன் காரணமாக எங்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை மழைக்காலங்களிலும் காற்று வீசும் போதும் நாங்கள் உயிரை கையில்பிடித்து கொண்டுதான் வாழ்ந்து வருகிறோம்.

இந்த மரத்தினை வெட்டி அகற்றுமாறு நாங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பல தடைவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் இது வரை நடக்கவில்லை எனவும் எனவே இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கவனமெடுத்து உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என இவர்கள் மேலும் தெரிவித்தனர்.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles