பொதுமக்களின் உதவியை கோரும் குற்றப் புலனாய்வு பிரிவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது மற்றும்  வாகனங்கள் சேதமாக்கப்பட்டமை குறித்து  குற்றப் புலனாய்வு பிரிவு  விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் பொதுமக்கள் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அறிவிக்குமாறு விசேட தொலைப்பேசி இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி 0718594950  என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அறியதருமாறு பொதுமக்களிடம்  குற்றப் புலனாய்வு பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Latest Articles