ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விஜயதாச ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்று அக்கட்சியின் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான திலங்க சுமதிபால தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு சுதந்திரக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ அவ்வாறானதொரு திட்டம் இல்லை, அது பற்றி கோரிக்கை விடுக்கப்படவும் இல்லை. விஜயதாச ராஜபக்ச அரசு பக்கமே உள்ளார். ஆளுங்கட்சி பக்கம் உள்ளவர்களுடன் கொடுக்கல் – வாங்கல் கிடையாது.” எனவும் திலங்க சுமதிபால குறிப்பிட்டார்.










