பொலிஸாருக்கு ஜனாதிபதி விடுக்கப்போகும் பணிப்புரை

வௌ்ளவத்தை, பம்பலபிட்டி உள்ளிட்ட கொழும்பு மாவட்டப் பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்றுப் பொலிஸார் அங்குள்ளவர்களின் தகவல்களை திரட்டுவதை நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தொலைபேசியூடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.

பொதுமக்களின் தகவல்களை வீடு வீடாகச் சென்று பொலிஸார் பதிவு செய்வது தவறென ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக மனோ கணேசன் டுவிட் செய்துள்ளார்.

உடனடியாக இது தொடர்பில் உரிய பணிப்புரையை வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது மனோவிடம் உறுதியளித்துள்ளதாகவும் மனோ குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles