பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் நகை, பணம் திருட்டு!

யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன திருடப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்த திருடர்கள், ஆறரை பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles