போதைப்பொருள் பாவனை – யாழில் இரு பெண்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள், போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு கிராம் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுகின்றது என யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்தனர்.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதைத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சாயிமேனன் தலைமையில் சென்ற குழு, இரு பெண்களையும் கைது செய்தனர்.

கைதாகியுள்ள  28 மற்றும் 29 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்களும், விசாரணைகளின் பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Latest Articles