போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 81 மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில்

கடந்த 9 மாதங்களில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களில் மூவர் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ள அவர், 78 பேர் 15 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஜனவரி முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இவர்கள் போதைப்பொருளுக்கு புனர்வாழ்வளிக்கும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த கல்வி அமைச்சர், ஐஸ் போன்ற மிகவும் ஆபத்தான போதைப்பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தற்போதைய சட்டங்கள் போதுமானவை இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles