போராட்டங்களை ஒடுக்க அவசரகால சட்டத்தை கையிலெடுக்கும் அரசு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், நகைச்சுவைத்தனமான சட்டமாக மாறியுள்ளது. அத்துடன், எதிர்காலத்தில் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அவசரகால சட்டத்தை அரசு பயன்படுத்தக்கூடும் – என்று முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதாம். பஸ்கள் மட்டும்தான் ஓடுவில்லை. ஏனைய எல்லா விடயங்களும் இடம்பெறுகின்றன. எனவே, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் என்பது நகைச்சுவைதனமாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் போராட்டங்களை ஒடுக்குவதற்கே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அரசு பயன்படுத்தியது. எனினும், அம்முயற்சி கைகூடவில்லை.

தற்போது அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உணவு விநியோகத்துக்கே அச்சட்டம் எனக்கூறப்பட்டாலும் அதன் உண்மையான நோக்கம் எதிர்ககாலத்தில் தெரியவரும். ஜனாதிபதிக்கு தேவையான வகையில் அச்சட்டத்தை பயன்படுத்தலாம். குறிப்பாக போராட்டங்கள் ஒடுக்கப்படலாம்.

போராட்டம் நடத்த வேண்டியதில்லை. துண்டி பிரசுரம் விநியோகித்தாலும், போராட்டத்துக்கான அழைப்பு விடுத்தாலும் மேற்படி சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யலாம். எனவே, அவசரகால சட்டத்தை இந்த அரசு எவ்வாறு பயன்படுத்தும் என்பது எதிர்காலத்தில் தெரியவரும்.” – என்றார். “

Related Articles

Latest Articles