ஜனாதிபதி மாளிகைக்கு முன் இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மையால் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 31 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்கள் வசமாகியுள்ளது.
