கலவுட கொடுன்ன பகுதியில் இன்று (30) அதிகாலை தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைக்கலப்பாக மாறியதில் மகனின் தாக்குதலில் தந்தை பலியானதாக கலவுட பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய மகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹபத்கமுவ, கொடுன்ன, ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மகனின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை ஐந்து மணியளவில் வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைக்கலப்பில் மாறியதில் குறித்த நபர் உயிரிழந்து உள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் (2) பி.எம். ஜயரத்ன, கலவுட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.கே யல்கும்புர ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கலவுட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கலவுட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
