மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடுகஸ்தலாவ பகுதியில் 4 கிலோ 600 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மடுகஸ்தலாவ பகுதியில் சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது 4 கிலோ 600 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
அத்தோடு 34 வயதுடைய மடுகஸ்தலாவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சா மற்றும் சந்தேக நபரையும் மடுல்சிமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மடுல்சீமை பொலிஸார் மேலும் கூறினர்.
ராமு தனராஜா