கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீகாகியூல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எக்கிரிய பகுதியில் இன்று மாலை இரு நபர்களுக்கு இடையிலான வாக்குவாதத்தின் போது நபர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் பலத்த காயமடைந்த நிலையில் மீகாகியூல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
52 வயதுடைய எக்கிரிய பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் மேற்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் குறித்த நபரும் அதே எக்கிரிய பகுதியைச் சேர்ந்த நபர் எனவும் தாக்குதல் மேற்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையின் பின்னர் சந்தேக நபரை நாளைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
