மட்டக்களப்பில் போராட்டம்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டம்!

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் இன்று சனிக்கிழமை (01) குறித்த போராட்டத்தை ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தேசிய அமைப்பினால் முன்னெடுத்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சமத்துவமான ஓய்வூதியம் வேண்டும், ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் 28 வருடங்கள் கடந்துள்ளன, ஓய்வூதிய முரண்பாட்டை தீர்க்க அரசிடம் நீதி கோருவோம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இன்றையதினம் பிரதமர் ஹரிணி அமரசூரிய மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அ. அலெக்ஸ் மட்டக்களப்பு

Related Articles

Latest Articles