பசறை பிரதேச கனவரல்ல மவுஸாகல தோட்டத்தைச் சேர்ந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் மண்சரிவு அனர்த்த நிலைமைக் காரணமாக கனவரல்ல கொட்டுஹாதன்ன சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மவுஸாகல தோட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் பாரியளவு மண்சரிவினால் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதை காணமுடிகிறது.
இதன்காரணமாக குறித்த மக்கள் கொட்டுஹாதன்ன சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பாதுகாப்பாக
தங்கவைக்கப்பட்டுள்ளனர்
குறித்த மக்களுக்கான அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கும் நடவடிக்கைகளை பசறை
பிரதேச செயலாளர் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த இரு வாரங்களாக பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவுகின்ற மழையுடனான காலநிலையால் மலைப்பாங்கான பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதோடு மக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நடராஜா மலர்வேந்தன்










