ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவரை 5 ம் கட்டை பகுதியில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்தமையினால் மலையகத்திற்கான புகையிரத போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்போது பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதமும் மண்மேடு சரிந்து விழுந்த இடத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மண்மேட்டை அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ராமு தனராஜா