மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது

புத்தாண்டு தினத்தில் மதுபோதையில் தனியார் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தாண்டையொட்டி கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் போக்குவரத்துப் பொலிஸாரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத் தப்பட்டது.

அந்தவகையில், வவுனியா மாவட்டத்திலும் போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டில் தனியார் பஸ் சாரதியைப் பொலிஸார் கைது செய்ததுடன், பஸ்ஸையும் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

சாரதிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

Related Articles

Latest Articles