மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் விரைவில் பதவி நீக்கம் செய்யப்படக்கூடும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தகவல் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டுமென்றால் பஸில் நாடாளுமன்றம் வர வேண்டும் என சொன்னார்கள். அவரும் நாடாளுமன்றம் வந்தார். நடந்த மாற்றம்தான் என்ன?
பிபீ ஜயசுந்தரவால்தான் நெருக்கடி, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றனர். அவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அடுத்தாக மத்திய வங்கி ஆளுநர் கப்ரால்மீது பழிசுமத்திவிட்டு, அவரை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படக்கூடும். இதுதான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடகமாகும். கப்ரால்தான் இவற்றுக்கு காரணம் எனக்கூறுவார்கள். ” – என்றார்.
