மன்னாரில் 53 ஆயிரம் போதை மாத்திரைகள் மீட்பு!

இலங்கைக் கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது, மன்னார் – இலுப்பைக்கடவை தடாகத்தில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப் பட்டிருந்த 53 ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான பொருட்கள் நாட் டுக்குள் வருவதைத் தடுக்கும் நோக்கில் கரையோர மற்றும் கடற்கரைப் பகுதி களில் மேற்கொள்ளப்பட்ட வழமையான நடவடிக்கைகளின்போது இந்தப் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப் பட்டன என்று இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையில் உள்ள எஸ்.எல்.என்.எஸ். புவனேகாவால் இலுப்பைக்கடவை தடாகத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் உதவியுடன் நேற்று மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது கடற் படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அருகே உள்ள புதர்களில் சந்தேகத்துக்கிடமான பெட்டியை மீட்டனர் .

இதன்போது 53 ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட் டன. மீட்கப்பட்ட போதை மாத்திரைகள் சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்பைக் கடவை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles