உள்ளூர் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் பெருமளவில் உயர்ந்துள்ளதால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் காய்கறிப் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், சந்தையின் தேவைக்கு ஏற்ப காய்கறிகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், விலைகளும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால், நுகர்வோர் கொள்வனவு செய்வதைக் குறைத்துள்ளனர். இதன் காரணமாக தமது வியாபார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பகுதி காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் சந்தையில் தற்போது காய்கறிகள் விற்பனை செய்யப்படும் சில்லறை விலைகள் வருமாறு:
கத்தரிக்காய் – ரூ.500
பச்சை மிளகாய் – ரூ.800
போஞ்சி – ரூ.450
கரட் ரூ.600 – 700
பூசணி – ரூ.400
வாழைக்காய் – ரூ.400
முட்டைக்கோஸ் – ரூ.600 – 650
வெள்ளரிக்காய் – ரூ.350
தக்காளி – ரூ.800
பாகற்காய் – ரூ.800
புடலங்காய் – ரூ.600
நுவரெலியா உருளைக்கிழங்கு – ரூ.450
எலுமிச்சை – ரூ.2,000
சிவப்பு வெங்காயம் – ரூ.800
காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அன்றாட உணவுத் தேவைகளுக்காக காய்கறிகளை கொள்வனவு செய்யும் பொதுமக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
